சைட்டம் தனியார் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரது கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சைட்டம் தனியார் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்ன இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.