தூக்கம் முக்கியமா?

Published By: Priyatharshan

09 Jun, 2018 | 08:51 PM
image

தற்போதைய சூழலில் பல இளைய தலைமுறையினர் வருவாய் ஈட்டுவதற்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள். 

ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறையும் கொள்வதில்லை. கவலையும் படுவதில்லை. நன்றாக சம்பாதித்த பிறகு மீதமுள்ள வாழ்க்கையை அமைதியாக அனுபவிக்கலாம் என்று எண்ணும் போது உடலியல் கோளாறுகள் ஒவ்வொன்றாக ஏற்படுகிறது. 

அதிலும் முக்கியமானது தூக்கமின்மை. அதனால் அவர்கள் தூக்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

ஒரு நாள் முழுவதும் நீங்கள் தூங்கவில்லை என்றால், அடுத்த நாள் உங்களுக்கு கண் எரிச்சல், சோர்வு, கோபம், எரிச்சல், மன உளைச்சல், தலைவலி, எதிலும் மனதை ஒருமுகப்படுத்த இயலாமை போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். 

எம்முடைய உடலில் பகலில் ஒருவகையினதான ஹோர்மோன் சுரப்பிகள் தங்களுடைய பணியை மேற்கொள்கின்றன. இரவில் வேறு வகையினதான ஹோர்மோன் சுரப்பிகள் தங்களுடைய பணியை மேற்கொள்ளும். 

இவைகள் இயல்பாக செயலாற்றுவதால் எம்முடைய இரத்த அழுத்தத்தையும், சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்துக் கொண்டு உடலை சீராக பராமரிக்கப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் உறக்கம் கெட்டால், அவர்களின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படலாம். குழந்தையின்மை கூட ஏற்படலாம். அதனால் தூக்கம் என்பது மனதிற்கும், உடலுக்கும் இவ்விரண்டின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.

தூக்கத்தின் போது அவர்களுடைய மூளை மற்றும் உடலுக்கு தேவையான ஓக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால், அவர்கள் அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கும் போது,சோர்வு, தலைவலியால் பாதிக்கப்படுவர். அதன் தொடர்ச்சியாக அன்றைய தினம் முழுவதும் அசதியாகவேயிருப்பார்கள். மூளைக்கு போதிய அளவு ஓக்ஸிஜன் கிடைக்காததால் எரிச்சல் மற்றும் கோபமான மனநிலையிலேயே இருப்பார்கள். மன உளைச்சலுக்கும் ஆளாகுவார்கள். ஒரு சிலருக்கு நினைவுத்திறன் பாதிக்கப்படலாம். 

இதனை சரியான தருணங்களில் கண்டறிந்து சிகிச்சையெடுத்து குணமடையவில்லை என்றால், இதன் காரணமாக இரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரை நோய் போன்றவை வரக்கூடும். ஏற்கனவே சர்க்கரை நோயும், இரத்த அழுத்தமும் இருந்தால் அவர்களுக்கு இந்த இரண்டு நோயும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடும். எனவே தூக்கத்தின் அவசியத்தை உணர்ந்து நாளாந்தம் குறைந்த பட்சம் ஏழு மணித்தியாலம் வரையிலாவது தொடர்ச்சியாக இரவு நேரங்களில் உறங்க வேண்டும்.

டொக்டர் என். ராமகிருஷ்ணன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29