கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் இயங்கி வரும் தொடர்பாடல் மற்றும் வணிகக் கல்வி கற்கைகள் பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

குறித்த பீடத்தின் சகல கல்வி ஆண்டு கற்கை நெறிகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்படுவதாக பீடாதிபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.