ஆல் இன் பிக்சர்ஸ் (All in Pictures) தயாரிப்பு நிறுவனம் தங்களது இரண்டாவது படமான ரம் படத்தின் படப்பிடிப்பை சென்னையில் 22 ஆம் திகதி கிக்காகத் துவங்குகிறது. மிக வித்தியாசமான படமாகப் பாராட்டப்பட்ட மசாலா படம்தான் இந்த நிறுவனத்தின் முதல் படம். 

ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா, மியா, விவேக், நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குனரான சாய்பரத். 

'அவளுக்கென்ன' படத்தின் மூலம் மீண்டும் மீண்டும் பாராட்டுக்களை  அள்ளிக் கொண்டிருக்கும் யூத் ஐகான் இசை அமைப்பாளர் அனிருத் ரம் படத்துக்கு இசையமைக்கிறார். 

படத்தில் பங்குபெரும் கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் சூழ ஒரு சிறு பூஜையோடு நேரடியாக படப்பிடிப்புதான்! 

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் இளைஞருமான விஜய ராகவேந்திரா படத்தைப் பற்றிக் கூறும்போது, 

"படத்தின் நாயகன் ஹ்ரிஷி எனது நல்ல நண்பர். 

படத்தின் கதையை கேட்டபோது, ஆரம்பித்திடுவோம் என்று சொல்வதைத் தவிர வேறேதும் சொல்ல முடியாத அளவுக்கு திருப்தியாக இருந்தது. வித்தியாசமான கதைகளை தருவதில் புதிய எல்லைகளைத் தொடவேண்டும் என்பதே எங்கள் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இலட்சியம். அடுத்து இரண்டு படங்களை விரைவில் தயாரிக்கத் துவங்கவிருக்கிறோம்.

ரம் ஒரு விதமான, அண்மையில் வராத பாணியிலான கிரைம் ஹாரர் படம் 

ஜனங்களின் கலைஞன் விவேக் நடிக்கும் முதல் ஹாரர் படமும் இது. அஞ்சாதே புகழ் நரேன் இதுவரை எந்தப் படத்திலும் பார்த்திராத மாதிரியான ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

அண்மையில் வேதாளம், நானும் ரவுடிதான், தங்க மகன் ஆகிய படங்களில் இசை கொடுத்த அனிருத் முதன் முதலாக ஒரு ஹாரர் படத்துக்கு இசை அமைப்பது இதுதான் முதல் முறை.

உற்சாகமான பல இளம் கலைஞர்கள் மனப்பூர்வமாக இந்தப் படத்துக்கு தங்கள் முயற்சியைப் போடுகிறார்கள். 

ரம் படம் ஒரு முழுமையான பொழுதுபோக்குப் புதையலாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்.

தகவல் : சென்னை அலுவலகம்