சப்ரகமுவ மாகாண மக்களுக்கு எச்சரிக்கை!!!

Published By: Digital Desk 7

09 Jun, 2018 | 01:17 PM
image

(நா.தனுஜா)

இன்புளுவென்சா வைரஸ் நோய் அறிகுறிகளுடன் எம்பிலிபிட்டிய பகுதியில் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே குறித்த வைரஸ் சப்ரகமுவ மாகாணத்தின் சில பிரதேசங்களை நோக்கி பரவும் அபாயமுள்ளது. ஆகவே பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் என எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி என்.எச்.தர்மதிலக தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

கடந்த சில வாரங்களாக 20 தொடக்கம் 30 வரையிலான நோயாளர்கள் இன்புளுவென்சா வைரஸ் நோய்க்கான அறிகுறிகளுடன் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நோய் நிலைமையானது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் தற்போது எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இன்புளுவென்சா வைரஸ் நோய் அறிகுறிகளுடன் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையினால்  பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இன்புளுவென்சா வைரஸ் காரணமாக இறப்புக்கள் எவையும் பதிவாகவில்லை. ஆனாலும் தென் மாகாணத்தின் சில பகுதிகளை நோக்கி வைரஸ் பரவுகை ஏற்படும் அபாயமுள்ளது. ஆகவே பொதுமக்கள் பொருத்தமான முன்னெச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும் என்றார்.

தற்போது தென் மாகாணத்தில் பரவிவரும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக 14 பேர் மரணித்துள்ளனர். எனவே வைத்தியசாலைகளில் மேற்படி நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளைக் கண்காணிப்பதற்கென சுகாதார அமைச்சினால் 19 பொது கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரச வைத்தியசாலைகளில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில் மேற்படி கண்காணிப்பு நிலையங்கள் அறிக்கைப்படுத்தலை மேற்கொள்ளும். அதன்மூலம் வைரஸ் பரவுகையினை பிரதேச அடிப்படையில் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும் என பிரதி சுகாதார அமைச்சர் பைஸல் காசிம் தெரிவித்துள்ளார்.

எனினும் தனியார் வைத்தியசாலைகளுக்கு இவ்விடயம் தொடர்பில் எவ்விதமான அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04
news-image

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-03-25 17:01:14
news-image

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30...

2025-03-25 16:57:39
news-image

கொழும்பு - கண்டி வீதியில் விபத்து...

2025-03-25 16:16:22
news-image

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின...

2025-03-25 17:11:15
news-image

புதிய கிராம அலுவலரை நியமிக்குமாறு கோரி...

2025-03-25 16:14:00
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; பிரதான...

2025-03-25 16:02:08
news-image

சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை...

2025-03-25 15:49:05
news-image

இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு உதவுங்கள்...

2025-03-25 16:06:25