பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 6 உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு சேவையின் அவசியம் கருதி உடனடியாக இடமாற்றம்.  

 பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் உட்பட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 06 பேருக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

கண்டி பிரிவில் பணியாற்றிய பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன மாத்தளை பொலிஸ் பிரிவுக்கும், கம்பளை பிரிவில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.ஜீ.என். ஜயசிங்க களுத்துறைப் பிரிவுக்கும், களுத்துறை பிரிவில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் யூ.பீ. பலிஹவடன கம்பளைப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். 

உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.டீ.டீ. சேனாநாயக்க மாத்தறை பிரிவிலிருந்து இரத்தினபுரி பிரிவுக்கும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.டி. சந்திரபால அம்பாறைவிலிருந்து கந்தளாய் பிரிவுக்கும் அநுராதபுரம் பிரிவில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் விஜித் டி அல்விஸ் கண்டி பொலிஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்துள்ளது.