இந்தியாவின் பல மாநிலங்களில் யுரேனிய வி‌ஷம் பரவல்

Published By: Daya

09 Jun, 2018 | 12:19 PM
image

இந்தியாவில் உள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழக நிபுணர்கள் இந்தியாவில் நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆறுகள், கிணறுகள், குளங்கள் மற்றும் ஏரிகளிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அதில் இந்தியாவிலுள்ள 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனியா வி‌ஷம் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 324 கிணறுகளில் உள்ள தண்ணீரில் ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றில் மிக அதிக அளவில் யுரேனிய வி‌ஷம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் குடிநீரில் 30 மைக்ரோ கிராம் யுரேனியம் இருக்க வேண்டும். ஆனால் அது அளவுக்கு அதிகமாக இருப்பதோடு  நைட்ரேட் மாசுவும் கலந்திருப்பதாக தெரிவிக்கின்றனர். 

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மே.வங்காளம், குஜராத், ஜார்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநில நிலத்தடி நீரில் யுரேனிய வி‌ஷம் பரவியுள்ளது.

இத்தகைய நிலத்தடிநீர் குடிநீர் மட்டுமின்றி விவசாயத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் யுரேனியத்தின் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும். 

இதனால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கலாம் எனவே இப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் அதிக அளவில் யுரேனியம் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42