முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  மகன் ரோஹித்த ராஜபக்ஷ "மங்முல வெலா " என்ற காணொளி பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார். இந்த பாடலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதோடு, பிள்ளைகளின் திறமை பெற்றோரின் மகிழ்ச்சிக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"என்னை விட்டு இன்னொருவனுடன் சென்றாய் " என்ற வரிகளை கொண்ட இந்த பாடலை  தானே எழுதி பாடியுள்ளார் ரோஹித்த ராஜபக்ஷ.

இப் பாடலுக்கு பாசன் லியனகே தனது இசையமைப்பை செய்துள்ளார். இப்பாடலின்  வரிகள் அனைத்தும் காதல் தோல்வியின் வலியை உணர்த்தும் விதமாக அமைத்துள்ளது.

இப் பாடலை யு டியூப் தளத்தில் வெளியிட்டு இரண்டே நாட்களில்  11 இலட்சத்துக்கு அதிகமானோர்  பார்வையிட்டுள்ளனர்.