கரந்தெனிய பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் டொனல்ட் சம்பத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் வைத்தியசாலை வளாகத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரகஸ்மங்சந்தி - கொரகின பிரதேசத்தில் நேற்றிரவு 10.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் டொனல்ட் சம்பத் பொல்லப்பட்டதோடு மற்றுமொருவர் குண்டு துளைத்த நிலையில் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந் நிலையில் தீவிர தேடல் நடவடிக்கையினையும், விசாரணைகைளையம் மேற்கொண்ட பொலிஸார் சற்று முன்னர் 22 வயதுடைய அசேல ரணசிங்க என்ற சந்தேக நபரை ஊரகஸ்மங்சந்தி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊரகஸ் மங்சந்தி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட 48 வயதுடைய டொனல்ட் சம்பத் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் கரந்தெனிய பிரதேச சபைக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகளுக்கு,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM