வவுனியாவில்  தடை செய்யப்பட்ட வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டன

கடந்த 30வருடகாலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வவுனியா நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கு அருகே சந்தை சுற்றுவட்ட வீதிக்குச் செல்லும் வீதி ஒன்று பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது நகரசபைக்கு தவிசாளரர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் குறித்த வீதி மக்களின் பாவனைக்குத் திறந்துவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நகரசபைத்தவிசாளர் இ. கௌதம்  மற்றும் நகரபை நிர்வாக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சென்று அவ்வீதியிலுள்ள தடைகளை அகற்றி இன்று முதல் மக்களின் பாவனைக்கு குறித்த வீதியைத் திறந்துவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் சந்தை சுற்றுவட்ட வீதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைக்கட்டுப்படுத்தி இலகுவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.