மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான எல். ஆர். வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேரடி வழிகாட்டலில் இவ் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளதாகவும்.

பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல், மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் சட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் நடமாடும் சேவை நிலையத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையும் இடம்பெறவுள்ள நடமாடும் சேவை நிலையத்தில் பொதுமக்கள் வந்து தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.