சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் அணிந்து கொள்ளும் ஆடையொன்று பாப்பரசருக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வசித்துவந்த ஆராய்ச்சியாளர்களுடன் மேற்கொண்ட  சந்திப்பின் போது சாதாரண விண்வெளி நிலைய வீரர்களிடமிருந்து பாப்பரசரை வேறுபடுத்தும் வகையில் குறித்த  ஆடையில் பாப்பரசருக்கான வெள்ளை மேலாடையும் இணைக்கப்பட்டு  ஆடை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஆடையின் கைப்பகுதியில் பாப்பரசரின் தாய்நாடான ஆர்ஜென்டீனாவின் தேசிய கொடியும், ‘Jorge Bergoglio’ எனும் அவருடைய இயற்பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த ஆடை பாப்பரசருக்காகவே தனிப்பட்டமுறையில் தயாரிக்கப்பட்டது என இத்தாலியைச் சேர்ந்த விண்வெளி வீரர் பாலோ நெஸ்போலி தெரிவித்துள்ளார்.

 நன்றி தெரிவித்த பாப்பரசர்,

“அப்படியென்றால் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு நான் பயணம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளீர்கள்” என வேடிக்கையாகப் பேசியுள்ளார்.