நடப்பு சம்­பியன் கண்டி விளை­யாட்டுக் கழகம் உட்­பட எட்டு பிர­தான றக்பி கழ­கங்கள் பங்­கு­பற்றும் டயலொக் றக்பி லீக் போட்­டிகள் இன்று ஆரம்­ப­மா­கின்­றன.

வெலி­ச­றையில் இன்று பிற்­பகல் நடை­பெறும் கடற்­ப­டைக்கும் விமா­னப்­ப­டைக்கும் இடை­யி­லான போட்­டி­யுடன் டயலொக் றக்பி லீக் சுற்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.


அத்­துடன் ஹெவ்லொக்ஸ் கழ­கத்­திற்கும் பொலிஸ் கழ­கத்­திற்கும் இடை­யி­லான போட்டி ஹெவ்லொக்ஸ் மைதா­னத்தில் மின்­னொ­ளியில் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

லோங்டன் பிளேஸ் மைதா­னத்தில் நாளைய தினம் சீ. ஆர். அண்ட் எவ். சி.யை இரா­ணுவம் எதிர்த்­தா­ட­வுள்­ளது. நடப்பு சம்­பியன் கண்டி கழ­கத்தை நித்­த­வ­ளையில் சீ. எச். அண்ட் எவ். சி. ஞாயி­றன்று சந்­திக்­க­வுள்­ளது. எட்டு அணிகளும் ஒன்றையொன்று லீக் சுற்றில் எதிர்த்தாடும்.