அருண தர்ஷனவுக்கு புதிய சாதனையுடன் தங்கம் : பசிந்து, தில்ஷிக்கு வெள்ளிப் பதக்கங்கள்

Published By: Priyatharshan

08 Jun, 2018 | 01:21 PM
image

(எம்.எம். சில்வெஸ்டர்)

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் அருண தர்ஷன புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, சக வீரர் பசிந்து கொடிகார வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 

அத்துடன் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் தில்ஷி ஷியாமலி குமாரசிங்கவும் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்தார்.

ஜப்பானின் கிபு நகரில் நடைபெற்றுவரும் 18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்றைய தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 12.15 மணி வரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் இலங்கைக்கு ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்திருந்தன.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியை 45.79 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கையின் அருண தர்ஷன புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார். முன்னைய போட்டி சாதனை 45.85 செக்கன்களாக இருந்தது.

அவரின் சக வீரரான பசிந்து கொடிகார 46.96 செக்கன்களில் போட்டியை ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். ஜப்பானின் ஷியுஜி மொறி 47.08 செக்கன்களில் ஓடி வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை இலங்கையின் தில்ஷி ஷியாமலி குமாரசிங்க 54.03 செக்கன்களில் ஓடி முடித்து  வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.  

இப் போட்டியில் இந்தியாவின் ஜிஸ்னா மெத்தியூ (53.26 செக்கன்கள்) தங்கப்பதக்கத்தை சுவீகரித்ததுடன், சைனீஸ் தாய்ப்பேயின் ஜிய் யுசான் யாங் (54.74 செக்.) வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இதில் ஜிஸ்னா மற்றும் தில்ஷி ஆகிய இருவரும் தத்தமது  தனிப்பட்ட சிறந்த நேரப்பெறுதிகளைப் பதிவு செய்தனர். 

இதேவேளை, இலங்கைக்கு பதக்கத்தை வென்று கொடுக்கக்கூடியவர் என நம்பப்படும் மற்றுறொரு வீராங்கனையான அமாஷா டி சில்வா பங்குபற்றும் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டி இன்னும் சில நிமிடங்களில் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளையாட்டுத்துறையிலிருந்து அரசியல் முற்றாக அகற்றப்படும் -...

2024-12-11 17:13:05
news-image

ஆசிய கிண்ணம் சவூதி அரேபியா 2027...

2024-12-11 14:43:07
news-image

புனெ டெவில்ஸ் அணியின் முன்னாள் உதவிப்...

2024-12-11 13:12:10
news-image

வர்த்தக ஹொக்கி சங்கத்தின் ஏற்பாட்டில் 46ஆவது...

2024-12-11 09:46:02
news-image

லங்கா ரி10 சுப்பர் லீக் கிரிக்கெட்டில்...

2024-12-11 09:11:17
news-image

பிரிமா சன்ரைஸ் வலுவூட்டும் ஸ்ரீலங்கா கனிஷ்ட...

2024-12-11 12:15:03
news-image

6 அணிகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண லங்கா...

2024-12-10 17:26:14
news-image

தென் ஆபிரிக்காவிடம் 2ஆவது டெஸ்டில் 109...

2024-12-09 15:38:10
news-image

ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டி...

2024-12-09 14:08:43
news-image

37 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு ஆசிய...

2024-12-09 14:01:06
news-image

எதுவும் நிகழலாம் என்ற நிலையில் இலங்கை...

2024-12-09 01:51:58
news-image

19 வயதின் கீழ் ஆசிய கிண்ண...

2024-12-08 23:58:07