தேயிலை ஏல விற்பனையில் அதன் சராசரி விலை ஒட்டுமொத்த ஏல விற்பனையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ் ஆண்டு மே மாதம் வரை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஈரானுக்கெதிராக அமெரிக்கா விதித்த தடைகள் இலங்கை தேயிலை ஏற்றுமதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் மே மாதம் ஒரு கிலோ தேயிலையின் ஏல விற்பனை சந்தையில் 627.61 ரூபாவாக காணப்பட்டது. அதேவேளை இவ்வருடம் மே மாதம் அதன் விலை 591.24 ரூபாவாக காணப்பட்டதுடன் ஏப்ரல் மாதம் தேயிலையின் விலை 606.75 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் இங்கைக்கு அனுப்பும் பணம், ஆடை ஏற்றுமதி, சுற்றுலாப் பயணத்துறை போன்றவற்றுக்கு அடுத்தபடியாக அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் நான்காவது இடத்தில் தேயிலை ஏற்றுமதி உள்ளது.

எனினும் தேயிலை ஏல விற்பனையில் அதன் சராசரி விலை ஒட்டுமொத்த ஏல விற்பனையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ் ஆண்டு மே மாதம் வரை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.