நியூஸிலாந்து அணித்தலைவர் மெக்கலமின் அதிவேக சத சாதனையை ஒரு இந்தியர் முறியடிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

நியூ­ஸி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரும் அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி, வெலிங்­டனில் நடந்த முத­லா­வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 52 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-–0 என்ற கணக்கில் முன்­னிலை வகிக்­கி­றது. இந்த நிலையில் அவுஸ்­தி­ரே­லியா - – நியூ­ஸி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லே ஓவல் மைதா­னத்தில் ஆரம்­ப­மா­னது.

இதில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற அவுஸ்­தி­ரே­லிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்­தது. முதலில் துடுப்­பெ­டுத்­தாட வந்த நியூ­ஸி­லாந்து அணி 370 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது. இந்த போட்­டி­யோடு சர்­வ­தேச போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெறு­வ­தாக அறி­வித்­துள்ள பிரண்டன் மெக்­கலம் தனது கடைசி போட்­டியில் 54 பந்­து­களில் சதம் விளாசி புதிய வர­லாற்று சாதனை படைத்தார். சதம் அடித்த பிறகும் தொடர்ந்து அதி­ரடி காட்­டிய மெக்­கலம் 79 பந்­து­களில் 21 பவுண்­ட­ரிகள் 6 சிக்­ஸர்கள் அடங்­கலாக 145 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்தார். இதற்கு முன்­ன­தாக அதி­வேக சதம் அடித்த சாத­னையை மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்­பவான் விவியன் ரிச்­சர்­ட்ஸும், பாகிஸ்­தானின் மிஸ்பா உல் ஹக்கும் பகிர்ந்து இருந்­தனர். இவர்கள் 56 பந்­து­களில் சதம் அடித்து இச்­சா­த­னையை நிகழ்த்­தி­யி­ருந்­தனர்.