வரு­டத்தின் அனைத்து நாட்­க­ளிலும் மாற்­ற­முள்ள நற்­ப­லன்­களை வழங்கும் லொத்தர், வாராந்தம் இலட்­சா­தி­ப­தி­களை அதி­க­ளவில் ஒரே தட­வையில் உரு­வாக்க தயா­ரா­கின்­றது.

அதன் படி லொத்தர் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இப்­பு­திய வரம் கிடைப்­பது அபி­வி­ருத்தி லொத்தர் சபை மூலம் கடந்த வியா­ழக்­கி­ழமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட “அபி­வி­ருத்தி இலட்­சா­தி­பதி” எனும் புதிய லொத்­தரின் மூல­மாகும். இப் புதிய “இலட்­சா­தி­பதி” லொத்தர் மிகவும் சர­ள­மான பரி­ச­மைப்­புடன் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­துடன் சந்­தையில் குறைந்த இலக்­கத்தின் மூலம் வெற்­றி­யா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்கு தயா­ரா­கின்­றது.

அதற்­க­மைய 50 இலக்­கங்­க­ளி­லி­ருந்து 3 இலக்­கங்களை பொருத்தி ஒரு இலட்சம் ரூபாய் பரி­சினை வெல்­வ­தற்­கான வாய்ப்­பினை இலங்கை மக்­க­ளுக்கு அபி­வி­ருத்தி லொத்தர் சபை வழங்­கு­கின்­ற­துடன் ஒரு சீட்­டி­ழுப்­பின்­போது 100 இலட்­சா­தி­ப­தி­களை உரு­வாக்­கு­வதும் நோக்­க­மாக கொண்­டுள்­ளது. அவ்­வாறே 2 இலக்­கங்­க­ளுக்கு 200 ரூபாவும் 1 இலக்­கத்­திற்கு 20 ரூபாவும் வெல்­வ­தற்­கான வாய்ப்பு உள்­ளது. “அபி­வி­ருத்தி இலட்­சா­தி­பதி” லொத்தர் ஒன்றின் விலை 20ரூபா ஆகும்.

இவ் விசேட இலட்­சா­தி­பதி லொத்தர் கடந்த வியாழக்கிழமை சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுன் அதன் முதல் சீட்டிழுப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி இடம் பெறும்.