பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறித்த நிலையில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை கண்டறிய நவீன பரிசோதனை கருவி அறிமுகமாகியிருக்கிறது.

முப்பரிமாண டிஜிற்றல் மேமோகிராம் என்ற கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளும் போது முதலில் வலி ஏற்படுவதில்லை. அத்துடன் மார்பகத்தின் எந்த பகுதியில் புற்றுநோய் கட்டி இருக்கிறது என்பதையும், அதன் நிலைப்பாட்டையும் துல்லியமாக தெரிவிக்கிறது. 

அத்துடன் அருகிலுள்ள திசுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இவை கண்டறியவும் உதவி செய்கிறது. அதே போல் புற்றுநோய்  கட்டி கண்களுக்கு புலப்படாத வகையில் சிறிய அளவில் இருந்தாலும் இவை அதனை வேறுபடுத்தி காட்டும் வகையில் இந்த நவீன கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 மார்பக புற்றுநோய் கட்டிகள் முப்பரிமாண வடிவில் காண்பதால் அதற்கான சிகிச்சை குறித்தும் வைத்தியர்களால் துல்லியமாக தீர்மானிக்க இயலுகிறது.

முப்பத்தைந்து வயதைக் கடந்த அனைத்து பெண்களும் இத்தகைய நவீன கருவியின் உதவியால் தங்களின் மார்பகத்தை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மாதவிடாய் நின்ற பெண்களும், நாற்பத்தைந்து வயதைக் கடந்தவர்களும் நிச்சயமாக ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.