உல­கத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த தயா­ரிப்­பு­களை பட்­டி­ய­லிடும் இங்­கி­லாந்தை சேர்ந்த பிரேண்ட் பினான்ஸ் அமைப்பின் 2018 ஆம் ஆண்­டுக்­கு­ரிய உலகின் முதல் 500 மதிப்பு வாய்ந்த தய­ரிப்­பு­களின் பட்­டி­யலில், சம்சுங் நான்காம் இடத்தை பெற்­றுள்­ள­தோடு, ஆசியாவின் உச்ச மதிப்பு வாய்ந்த தயா­ரிப்பு என்ற மாபெரும் கௌர­வத்­தையும் பெற்று சாதனை படைத்­துள்­ளது.

உல­க­ளா­விய ரீதியில் 500 சிறந்த தயா­ரிப்­புக்­களில் 4 ஆவது இடத்திற்கும் ஆசி­யாவின் மதிப்பு வாய்ந்த தயா­ரிப்­பா­கவும் தேர்வு செய்­ய­ப்பட்­ட­தற்கு சம்சுங் நிறு­வ­னத்தின் வர்த்­தக மதிப்பு 92.3 பில்லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு 39 வீதம் அதி­க­ரித்­த­மையே காரணமாகும். 

புதி­தாக வடி­வ­மைக்­கப்­பட்ட Galaxy S8, S8 Plus மற்றும் Note 8 ஸ்மார்ட்­போன்­களின்  விற்­ப­னை­யினால் நிறு­வ­னத்தின் வர்த்­தக மதிப்பு, Q3 2017 இல் 19.3 வீத  அதி­க­ரித்­துள்­ள­தாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்சுங்கின் இலங்கை நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவ பணிப்­பாளர் ஹான்பே பார்க் கூறு­கையில், ´´சம்சுங் உலகில் 4 ஆவது மதிப்பு வாய்ந்த தயா­ரிப்­பாக தேர்வு செய்­யப்­பட்ட இந்த சாத­னை­யினால் நாம் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம். இலங்­கை­யிலும் சம்சுங் நிறு­வனம் அதிக சந்தைப் பங்கை வெளிக்­கொண்டு வரு­கின்­ற­மையால் எமது ஸ்மார்ட்­போன்கள் முதன்மை தயா­ரிப்பு என்ற நிலையை அடைந்­து­வ­ரு­கின்­ற­மையை உறு­திப்­ப­டுத்த முடி­கின்­றது. சமீ­பத்தில் ´SLIM Nielsen People’s Awards´ விரு­து­வி­ழாவில் ‘People’s Youth Choice Brand of the Year என்ற விருது எமக்கு வழங்­கப்­பட்­டது. இந்த விரு­தா­னது எமது வெற்­றி­க­ர­மான தொழில் வளர்ச்­சியின் பிர­தி­ப­லிப்­பாகும். உள்ளூர் மக்­க­ளி­டையே சம்சுங் ஸ்மார்ட் போன்­க­ளுக்கு மகத்­தான வர­வேற்பு இருப்­பதால் இலங்­கையில் எமது ஸ்மார்ட்போன் தயா­ரிப்­புக்­களில் பல்­வேறு பிரி­வு­களில் சிறந்த அம்­சங்­களை வழங்­கு­வ­தற்­கான திட்­டங்­களை நாங்கள் முன்­னெ­டுக்­க­வுள்ளோம் என்றார்.