ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்­கு­பற்றும் இலங்கை அணி பங்­க­ளா­தே­ஷிற்கு பய­ண­மா­கி­யுள்­ளது. லசித் மலிங்க தலை­மை­யி­லான இலங்கை அணி ஆசியக் கிண்­ணத்தில் தனது முதல் போட்­டியில் எதிர்­வரும் 25ஆம் திகதி விளை­யா­டு­கி­றது. ஆனால் எந்த அணி­யுடன் விளை­யா­ட­வுள்­ளது என்­பது இன்னும் உறு­தி­யா­க­வில்லை.

இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் ஆகிய நான்கு அணிகள் விளையாடுவது உறு­தி­யா­கி­விட்ட நிலையில், ஐந்­தா­வது அணி­யாக ஆசியக் கிண்­ணத்தில் விளை­யாடும் அணி எது என்­ப­தற்­கான போட்டி தற்­போது நடை­பெற்­று­வ­ரு­கி­றது. இதில் ஆப்­கா­னிஸ்தான், ஹொங்கொங், ஓமான் மற்றும் ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் போட்டி போடு­கின்­றன. இதில் ஏதா­வது ஒரு அணி முதல் போட்­டியில் இலங்­கை­யுடன் மோதும்.

28ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள போட்­டியில் தொடரை நடத்தும் பங்­க­ளா­தேஷும் இலங்­கையும் மோது­கின்­றன. எதிர்­வரும் 27ஆம் திகதி இந்­திய – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்டி நடை­பெ­ற­வுள்ளது. இரு­ப­துக்கு 20 போட்­டி­யாக நடைபெறும் ஆசிய கிண்ணத் தொடர் எதிர்வரும்

24ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் மாதம் 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.