வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக ருகுணு பல்கலைகழகத்தின் மாபலான விவசாய பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைகழகத்தின் உபவேந்தர் காமினி சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, கடந்த சில நாட்களாக குறித்த தொற்றுக்கு உள்ளாகி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 100 மாணவர்கள் வரையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.