(என்.ஜீ.ராதாகிருஷ்ணன்)

இலங்கை மற்றும் தாய்லாந்து சிறைகளில் உள்ள பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கைதிகளை மீள பாகிஸ்தானுக்கு அழைத்து வர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தானின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் பாகிஸ்தானிய சட்டமா அதிபர், 19 பாகிஸ்தான் கைதிகளை திரும்ப பாகிஸ்தானுக்கு அனுப்ப தாய்லாந்து அரசு 3,5000 டொலர் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் கைதிகள் வெளிநாட்டில் முகங்கொடுக்கும் துன்பங்களுக்கு பாகிஸ்தான உயர் நீதிமன்ற நீதியரசர் மெயின் சாகிப் நிசார், தாய்லாந்து கோரிய தொகையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.