வெளிநாடுகளுக்கு தத்துக்கொடுக்கப்பட்ட பிள்ளைகளை தாய்மாருடன் இணைக்கும் திட்டம்

Published By: Priyatharshan

07 Jun, 2018 | 04:27 PM
image

குழந்தைகளை வளர்ப்பதற்காக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு குழந்தைகளை தத்துக்கொடுத்த இலங்கை தாய்மார்களை மீண்டும் அவர்களின் பிள்ளைகளுடன் ஒன்றிணைப்பதற்கான திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ருவான்வெல்ல பகுதியில் நெதர்லாந்தில் இருந்து வந்த செனாபன் ரொசானினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா நாடுகளில் தத்தெடுக்கப்பட்டு வாழும் பருவ வயதினரை இலங்கையில் உள்ள அவர்களது பெற்றோருடன் இணைப்பதற்காக அவர் இலங்கைக்கு வந்துள்ளார். தாய்மார்களை கண்டுபிடிப்பதற்காக அவர் பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளார்.

தாய்மார்களை கண்டுபிடிப்பதை தொடர்ந்து தாய்மார்கள் தமது குழந்தைகளை கண்டு பிடிப்பதில் ஆர்வமாக இருந்தால் ஐரோப்பா உட்பட ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் டி.என்.ஏ . வங்கியை ஐரோப்பா நிறுவுவதற்கு உதவும் என்றும் செனாபன் ரொசான் சுட்டிக்காட்டினார்.

இதனால் பிள்ளைகளை தத்துக்கொடுத்த தாய்மார்களுடன்  கடந்த 3ஆம் திகதி விகாரமஹாதேவி பூங்காவில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அதன் பின்பு கடந்த 4ஆம் திகதி திங்கட்கிழமை வெளிநாடுகளில் தங்களுடைய பிள்ளைகளை  வழங்கிய தாய்மார்களின் ஆவணங்களும் பெறப்பட்டன.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செனாபன் ரொசான், நாங்கள் பிள்ளைகளை தத்துக்கொடுத்த தாய்மார்களின் கதைகளை ஒன்று சேர்த்து நெதர்லாந்து நாட்டு அரசிடம் வழங்குவோம்.

நாங்கள் நினைக்கின்றோம் நெதர்லாந்து அரசு டி.என்.ஏ  வங்கியை நிறுவுவதற்கு உதவி செய்யும் என நம்புகின்றோம். டி.என்.ஏ .  ஊடக தான் நாம் பெற்றோரை தெளிவாக அடையாளம் காண முடியும். அவ்வாறு குழந்தைகளை தத்துக்கொடுத்த தாய்மார்கள் இருந்தால் தங்களிடம் விபரங்களைத் தாருங்கள் என தெரிவித்தார்.

அவ்வாறு வெளிநாட்டவர்களுக்கு தமது பிள்ளைகளை தத்துக்கொடுத்த பெற்றோர்  0774289289 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இலங்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்றதாக இலங்கை  அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. 1980 களில் இலங்கையில் இருந்து சிறுவர்கள் தத்தெடுத்தல் என்ற போர்வையில் கடத்தப்பட்டதை நெதர்லாந்தின் தொலைக்காட்சியொன்று “இலங்கையின் சிறுவர் பண்ணைகள்” என்ற நிகழ்ச்சி மூலம் கடந்தவரும் அம்பலப்படுத்தியிருந்தது.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கையில் இருந்து சிறுவர்கள் கடத்தப்பட்டமை உண்மையென தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்திலும் “சிறுவர் பண்ணைகள்" இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் இதுவரையில் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19