ரணிலை ஜனாதிபதியாக்கும் சூழ்ச்சிக்கான உபாயமே - கூட்டு எதிர்க்கட்சி தெரிவிப்பு

Published By: Daya

07 Jun, 2018 | 04:24 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

மக்கள் ஆதரவினால் ஜனாதிபதியாக தெரிவாக முடியாத ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க வேண்டிய தேவை மக்கள் விடுதலை முன்னணிக்கு உள்ளது. அதனால் தான் மக்கள் விடுதலை முன்னணி அரசியலமைப்பின் இருபதாவது திருத்தச்சட்ட மூலத்தை கொண்டுவருவதற்கு முனைகிறது.

மேலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியை மறைப்பதற்கு அர்ஜுன் அலோசியல் அதிகளவானோருக்கு பணம் வழங்கியுள்ளார். அதனை ஒரே முறையில் வழங்காது நான்கு, ஐந்து காசோலைகளாக வழங்கியுள்ளார். 

எனவே அவர் தனியாக சிறைக்குச் செல்லாது இன்னும் பலரையும் இணைத்துக்கொண்டு சிறை செல்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசியது. ஆட்சிக்கு வந்த பின்னர் அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடங்கள் மீது நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. 

கடந்த காலங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற சிறப்புரியமையைப் பயன்படுத்தி ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டும் விமர்சித்துள்ளார்.

மேலும் நல்லாட்சியில் சமூக ஊடகங்களும் முடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அண்மையில் டி.என்.எல். நிறுவனத்தின் ஒளிபரப்பை தடைசெய்வதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து விமர்சித்தமையினால் குறித்த அவசர தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் சதோதருக்குச் சொந்தமான அந்த நிறுவனத்தின் ஒளிபரப்பு உரித்தை பிரதமருக்கும் தெரியப்படுத்தாது தடைசெய்வதன் பின்னணில் ஜனாதிபதி உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிறுவனத்தின் தடையுடன் இரண்டு விடயங்கள் வெளிப்பட்டுள்ளன.

அரசாங்கத்திற்குள்ளக ரீதியில் பிரச்சினை உக்கிரடைந்திருப்பதும், ஜனாதபதி தனக்குத் தெரியாமல் பல விடயங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகின்ற போதும் அவ்வாறான செயற்பாடுகளின் பின்னால் அவர் உள்ளமை தெளிவாகிறது. அதனால்தான் பிரதமருக்கும் தெரியப்படுத்தாது டி.என்.எல். நிறுவனத்தின் ஒளிபரப்பு தடைசெய்யப்பட்டுள்ளது.  

எனவே நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல், சமூக,பொருளாதார நெருக்கடிகளுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் பதில்கூற வேண்டும். 

மேலும் மாதுளுவாபே சோபித தேரரின் நினைவு தினத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது முப்பது வருடகால அரசியல் வாழ்க்கையில் தான் உயர்வடைந்து கொண்டு சென்றதாக குறிப்பிட்டார். 

எனவே அந்த முப்பது வருட காலத்தில் இறுதி பத்து வருட காலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து அரசியல் செய்துள்ளார்.

அவ்வாறெனில் முன்னாள் ஜனாதிகதியுடன் இணைந்து அரசியல் செய்தபோது அவரின் பயணம் உயர்வடைந்து சென்றுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 ஆனாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசியல் செய்ய ஆரம்பித்த கடந்த மூன்று ஆண்டுகளில் தன்து அரசியல் வாழ்க்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் இடம்பெறும் பல விடங்களை தான் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவ்வாறெனின் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றில் 42 உறுப்பினர்களின் ஆதரை மட்டும் பெற்றிருந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக அவரே நியமித்தார். எனவே அதுவும் ஜனாதிபதிக்குத் தெரியாமலா நடந்தது?

எனினும் இன்னும் காலம் கடக்கவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலமையிலான அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை அவசியமில்லை. 

எனவே நாட்டுக்குப் பொருத்தமான பிரதமர் ஒருவரை நாளைய தினமே நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது.

 அதனைச் செய்யாவிடத்து எஞ்சியுள்ள காலத்தில் நாட்டில் பாரிய நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும்.

மேலும் அரசியலமைப்பின் இருபதாம் திருத்தச்சட்ட மூலத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது.  

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சி பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும். 

மக்கள் ஆதரவினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்ய முடியாத ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க வேண்டிய தேவை மக்கள் விடுதலை முன்னணிக்கு உள்ளது. 

அதனால்தான் மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டத்தை நிறைவேற்றும் பணியில் இறங்கியுள்ளது.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை சிலர் விமர்சித்தாலும் அதில் சிறந்த பண்பொன்றுள்ளது. அதவாது ஜனாதிபதி நாட்டிலுள்ள சகல இன மக்களின் ஆதரவுடன் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்படுகிறார். 

எனினும் இருபதாம் திருத்தத்தின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளினால் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கின்றனர். அது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

மேலும் மத்திய வங்கி மோசடியை மறைப்பதற்கு பணம் பெற்றவர்கள் குறித்து முழுமையான அறிக்கை சபாநாயகருக்கு வழங்கப்படவில்லை. 

தொலைபேசி அழைப்பு குறித்த அறிக்கையே தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் முழுமையான அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னர் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே முழுமையான அறிக்கை கிடைக்குமா இல்லையான என்பது பிரச்சினைக்குரிய விடயம். ஆகவே கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கையை பாராளுமன்றத்திற்கு வழங்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

மேலும் மத்திய வங்கி மோசடியை மறைப்பதற்கு அர்ஜுன் அலோசியல் அதிகளவானோருக்கு பணம் கொடுத்துள்ளார். ஒரே முறையில் அது வழங்கப்படவில்லை நான்கு, ஐந்து காசோலைகளாக அதனை வழங்கியுள்ளார். எனவே அர்ஜுன் அலோசியல் தனியாக சிறைக்குச் செல்லாது இன்னும் பலரையும் இணைத்துக்கொண்டு சிறை செல்வதற்கே எதிர்பார்த்துள்ளார்.

மேலும் தென் மாகாணத்தில் வைரஸ் தொற்று உக்கிரமடைந்து வருகிறது. எனினும் அது குறித்து அரசாங்கமும் சுகாதர அமைச்சும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

  காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சர், பிரதியமைரச்சர், அமைச்சின் செயலாளர், சுகாதார சேவை பணிப்பாளர் நாயம் உட்பட எந்தவொரு அதிகாரியும் குறித்த வைத்தியசாலைகளுக்குச் சென்று நிலைமையினை அவதானிக்கவில்லை. கொழும்பிலிருந்து கொண்டே அறிக்கை விடுக்கின்றனர்.

வைரஸை கட்டுப்படுத்துவதற்கான உரிய வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை. அதனால் பெற்றோர்கள் பீதியடைந்து தமது பிள்ளைகளை பாடசாலை உட்பட பொது இடங்களுக்கு அனுப்புவதற்கு அச்சப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44