களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் குறித்த மாணவியின் பாட்டியும் தொடர்புபட்டுள்ளமை விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

 கோழி இறைச்சிக்கடை உரிமையாளரால் 15 வயதுடைய மாணவி துஷ்பிரயோகப்படுத்தபட்ட சம்பவத்தில் பொலிஸாரால் குறித்த உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் பின்னர் குறித்த நபரை ஜூன் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதம நீதவான் சந்திமா எடிரிமானே உத்தரவிட்டுள்ளார்.

 குறித்த நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த மாணவியின் பாட்டியும் உதவியமை கண்டறியப்பட்டுள்ளது.