புனித ரமழான் மாதத்தில் நேற்று இரவு(06-06-2018) இரு உயிர்கள் பறிபோன சோக சம்பவம் தெஹிவளையில் பதிவாகியுள்ளது.

தெஹிவளை வைத்ய வீதி பிரதேசத்தை சேர்ந்த இன்சாப் இப்ராஹீம் (21) மற்றும் சுதர்சன ரோட் பிரதேசத்தை சேர்ந்த யூஸப் (13) ஆகியோர் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

தொழுகைக்காக பள்ளிக்கு சென்று திரும்பும்போதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.