கள், சாராயத்தின் விலையை குறைக்க வேண்டும் - மங்கள சமரவீர

Published By: Daya

07 Jun, 2018 | 12:48 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பியர் விலைகளை குறைத்தமையினால் செறிவு கூடிய மதுபான பாவனை தற்போது குறைந்துள்ளது. என்றாலும் நாம் சாதாரண மக்கள் பாவனை செய்யும் கள், சாராயத்தின் விலையை  குறைக்க வேண்டும். பாராளுமன்றத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காவிடின் கள், சாராயத்தின் விலையை குறைக்க முடியும் என நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார்.

புதிய வருமான வரி சட்டத்தை ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தற்போது வரை புதிதாக 42 ஆயிரம் வரி பைல் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் நேரடி வரி வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் வட் வரியை 2.5 வீதத்தினால்  குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று  நிதி அமைச்சின் மது வரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்கள் மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

அத்தியாவசிய பொருட்கள் அதிகரிக்கப்பட்டதாக கூறுகின்றனர். என்றாலும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் போது காணப்பட்ட விலையை விட தற்போது குறைவாகவே உள்ளது. அப்போது சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராம் 97 ரூபா இருந்தது. தற்போது 87 ரூபாவாக குறைந்துள்ளது. இதுபோன்று சீனி, மா, பருப்பு உட்பட பலதும் குறைந்துள்ளது. அப்போதைய விலைக்கும் தற்போதைய விலைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. எனினும் தேங்காய் விலை மாத்திரமே வெகுவாக அதிகரித்துள்ளது. என்றாலும் தற்போது 75 ரூபாவுக்கு தேங்காய் கொள்வனவு செய்ய முடியும். 

மஹிந்த ராஜபக்ஷ 20 வீதம் வரி குறைப்பதாக ஊடகங்களுக்கு அறிவித்தாலும் அதனை எப்படி செய்வது என்பதனை அவர் விபரிக்கவில்லை. 20 சதவீதம் வரியை குறைத்தால்  மறைமுக வரியை அதிகரிக்க வேண்டி வரும். தற்போது நேரடி வரிக்கான பைல் 4 இலட்சமே உள்ளது. ஆகவே நேரடிக்கும் மறைமுக வரிக்கும் பிரித்து கையாளவேண்டும். 

தற்போது புதிய வருமான வரி சட்டத்தை ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் புதிதாக 42 ஆயிரம் வரி பைல் திறக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் புதிய பைல்கள் 42 ஆயிரம் திறக்கப்பட்டமை விசேட அம்சமாகும். அடுத்த ஆண்டில் நேரடி வரி வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் வட் வரி 2.5 வீதத்தினால்  குறைக்க முடியும். மஹிந்த ராஜபக்ஷ 20 வீத நேரடி வரி விதிப்பை குறைப்பதாயின் சாதாரண மக்களுக்கான வரியை அதிகரிக்க வேண்டிவரும்.

அத்துடன் நாம் பியர் விலைகளை குறைத்தமையினால் மதுபான பாவனை குறைந்துள்ளது. என்றாலும் நாம் சாதாரண மக்கள் பாவனை செய்வதனால் கள், சாராயத்தின் விலையை  குறைக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காவிடின் கள், சாராயத்தின் விலையை குறைக்க முடியும். அனைவரும் விரும்பினால் அதனை செய்வோம். அது சாதாரண மக்களின் பணம் என்பதனால் அதனை குறைக்க வேண்டும்.

ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப முனைய கூடாது. பொய் கூறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதனை நிறுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58