(எஸ்.ஜே.பிரசாத்)

"எவரெஸ்ட் சிக­ரத்தின் உச்­சிக்கு ஏற 400 மீற்றர் தூரமே இருந்த நிலையில் ஒட்­சிசன் தாங்­கியில் ஏற்­பட்ட கோளா­றினால் உச்­சியை அடைய முடி­யாமல் பாதி­யி­லேயே திரும்­பினேன்.

அந்த இடத்­துக்கு செல்லும் போது அன்­றைய என்­னு­டைய கனத்த மன­நிலை எனக்கு ஞாப­கத்­துக்கு வந்­தது.

2 நிமி­டங்கள் அந்த இடத்தில் நான் நின்­று­விட்டேன்" என்று தனது வெற்றிக்கதையை விவ­ரித்தார், எவரெஸ்ட் சிக­ரத்தை அடைந்த இலங்கையின் இரண்­டா­வது நபரும் முதலா­வது ஆணு­மான ஜொஹான் பீரிஸ்.

கடந்த மே மாதம் 22 ஆம் திகதி காலை 5.55 மணிக்கு ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் மலை உச்­சியை அடைந்தார். இச் சாதனைப் பயணத்தின் மூலம் எவரெஸ்ட் உச்­சியை அடையும் இரண்­டா­வது நபராகவும் இலங்­கையின் முத­லா­வது ஆண் என்ற பெரு­மை­யையும் அவர் பெற்றார்.

இலங்­கை­யர்கள் எவரெஸ்ட் உச்­சியை அடையும் பய­ணத்தை ஆரம்பித்தது கடந்த 2016 ஆம் ஆண்டு. அப்­போது ஜொஹா­னுடன் ஜயந்தி குரு ­உ­டும்­ப­லவும் எவரெஸ்ட் உச்­சியை அடையும் பய­ணத்தை ஆரம்­பித்­தார்.

அப் பய­ணத்தில் வெற்­றி­க­ர­மாக உச்­சியை அடைந்­தது ஜயந்தி மட்டும்தான். ஜொஹானால் 400 மீற்றர் தூரம் இருக்­கும்­போது ஒட்சிசன் தாங்கி செய­லி­ழந்­ததால் திரும்பி வர நேரிட்­டது. அதனைத் தொடர்ந்து கடும் பயிற்­சி­களை மேற்­கொண்டு இரண்­டா­வது முறையாக எவரெஸ்ட் உச்­சியை அடையும் பய­ணத்தை தொடங்­கிய ஜொஹான் இம்­முறை வெற்­றி­கண்­டு­விட்டார்.

இலங்­கையின் சாதனைப் புத்­த­கத்தில் இணைந்­து­கொண்ட ஜொஹானுக்கு நேற்று ஹில்டன் ஹோட்­டலில் விசேட பாராட்டு விழா ஒன்று நடை­பெற்­றது. அதில் பேசிய ஜொஹான் தனது அனுபவங்கள் குறித்து பகிர்ந்­து­கொண்டார்.

அவர் பேசு­கையில்,

எம்­மைப்­போன்று எவரெஸ்ட் உச்­சியை அடை­வ­தற்­காக சென்றவர்கள் இறந்து கிடந்­ததை நேர­டி­யாகக் கண்­டவன். மீண்டும் மலை­யேறப் புறப்­பட்­டது வித்­தி­யா­ச­­மான அனு­ப­வம்தான். ஆனால் வெற்றி என்ற ஒன்றை மட்­டுமே உள் நிறுத்தி நான் என் பய­ணத்தை தொடங்­கினேன்.

கடந்த முறை திரும்­பி­வர ஏற்­பட்ட அந்த இடத்தில் நான் 2 நிமிடங்கள் நின்­று­விட்டேன். அங்­கி­ருந்து சுற்றிப் பார்த்தேன். 

என்னை அடுத்த அடி எடுத்து வைக்க முடி­யாமல் திருப்பியனுப்பிய அந்த இடத்திலிருந்து மலையின் உச்சிவரையான ஒவ்வொரு அடியையும் அனுபவித்து அனுபவித்து எடுத்து வைத்தேன் என்றார்.