24 மணி நேர புத்தக விற்பனை நிகழ்வு இலங்கையில் மீண்டும் ஜுன் 28 முதல் ஜுலை 8 வரை இடம்பெறவுள்ளதுடன் 1.5 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் 60 முதல் 80 வீதம் வரையான விலைத் தள்ளுபடிகளுடன் கிடைக்கவுள்ளன.

Big Bad Wolfபுத்தக விற்பனை மீண்டும் இலங்கையில் இடம்பெறவுள்ளமை தொடர்பில் நேற்று கொழும்பு பார்க் ஸ்ரீட் மியூஸில் இடம்பெற்ற ஊடக நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் இடம்பெறும் மிகப் பாரிய புத்தக விற்பனை நிகழ்வு என அறியப்படுகின்ற Big Bad Wolf புத்தக விற்பனை 2018 ஜுன் 28 ஆம் திகதி முதல் ஜுலை 8 ஆம் திகதி வரை இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (SLECC) பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளதுடன் 1.5 மில்லியன் புத்தகங்கள் 60 முதல் 80 வீதம் வரையான விலைத்தள்ளுபடிகளுடன் கிடைக்கவுள்ளன.

இவ்விற்பனை நிகழ்வின் மூலமாக புத்தகப் பிரியர்கள் 255 மணி நேரம் இடைவிடாத புத்தக கொள்வனவு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளதுடன் நிகழ்வு இடம்பெறும் 11 தினங்களும் 24 மணி நேர விற்பனை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு பொதுமக்களுக்காக திறந்து விடப்படுவதற்கு முன்பதாக ஜுன் 27 அன்று மு.ப 10.00 மணி முதல் பி.ப 11.00 மணி வரை இடம்பெறவுள்ள விசேட முன்னோட்ட நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை தெரிவு செய்யப்பட்ட விருந்தினர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளனர். 

Big Bad Wolf முகநூல் பக்கத்தில் இடம்பெறும் போட்டி மற்றும் அதன் ஊடக பங்காளர்களின் மூலமாக முன்னோட்டத்திற்கான சிறப்பு அழைப்பிதழ்களை விருந்தினர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

Big Bad Wolf Books இன் ஸ்தாபகரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான அன்ட்ரூ யாப், Big Bad Wolf Books பங்காளரான தீபக் மாதவன், ProRead Lanka (Pvt) Ltd இன் பணிப்பாளரான நிஷான் வாசலதந்திரி ஆகியோர் ஊடக அறிமுக நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். 

இலங்கை கல்வியமைச்சு இந்நிகழ்விற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. உத்தியோகபூர்வ வங்கிச்சேவை பங்காளரான இலங்கை வங்கி, உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் சேவை பங்காளரான மொபிடெல் மற்றும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் ஆகியன இந்நிகழ்வின் பங்காளர்களாகச் செயற்படுகின்றன. Upay  கொடுப்பனவு சேவையும் இதற்கு வலுவூட்ட முன்வந்துள்ளது.

“இந்த ஆண்டில் இன்னமும் மேம்பட்ட மற்றும் சிறப்பான புத்தக விற்பனையுடன் மீண்டும் இலங்கைக்கு வருகை தருவதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். கடந்த ஆண்டு நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக மாறியதுடன் சிறந்த தரத்திலான மற்றும் நியாயமான விலைகளைக் கொண்ட ஆங்கில புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை மக்கள் எந்த அளவிற்கு ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர் என்ற உண்மையையும் நாம் அதன் மூலமாக உணர்ந்து கொண்டோம்.

இம்முறை மேலும் பல வகையான புத்தகங்களை இலங்கையிலுள்ள புத்தகப் பிரியர்களுக்கு நாம் வழங்கவுள்ளோம்.” என்று அன்ட்ரூ யாப் குறிப்பிட்டார். 

“ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பினை அதிக அளவில் வழங்கி, இலங்கை மக்களை வலுவூட்டுவதற்கு தமது ஆதரவை வழங்க முன்வந்துள்ள எமது பங்காளர்களுக்கும் ஏனைய ஸ்தாபனங்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

Big Bad Wolf Books இன் உள்நாட்டுப் பங்காளரான ProRead Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளரான நிஷான் வாசலதந்திரி அவர்கள் நிகழ்வில் உரையாற்றுகையில்,

“இரண்டாவது தடவையாகவும் இலங்கையில் மீண்டும் இந்த புத்தக விற்பனை நிகழ்வினை ஏற்பாடு செய்வதையிட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். கடந்த ஆண்டு இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப் பாரிய விற்பனை நிகழ்வு முதன்முறையாக இதன் மூலமாக அறிமுகமாக்கப்பட்டதுடன், மறக்க முடியாத ஒரு நிகழ்வாக நாம் அதனை மாற்றியமைத்திருந்தோம். இம்முறை மேம்பட்ட மற்றும் சிறப்பான அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக Big Bad Wolf புத்தக விற்பனை நிகழ்விற்கு வருகை தருமாறு அனைத்து வயது மட்டங்களையும் சார்ந்த புத்தகப் பிரியர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.” என்று குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நடாத்தப்பட்ட இவ்விற்பனை நிகழ்வு இந்த ஆண்டு ஜுன் மாதத்தில் இடம்பெறவுள்ளதுடன், வாசிப்பு ஆர்வலர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாக இது மாறியுள்ளது. புனைகதைகள், அதிக அளவில் விற்பனையாகும் நூல்கள், இலக்கியம், புனைகதை-அல்லாதவை, வர்த்தக நூல்கள், சமையல் புத்தகங்கள், கலை மற்றும் வடிவமைப்பு, கோப்பி மேசை புத்தகங்கள் மேலும் பல என 1.5 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்களை வாசிப்பு ஆர்வலர்கள் பெற்றுக்கொள்ள முடிவதுடன் வழமையான சில்லறை விலைகளை விடவும் 60 முதல் 80 வீதம் தள்ளுபடியுடனான விலைகளில் கிடைக்கப்பெறுகின்றன.

இரவு நேரக் கதைகள், நிறந்தீட்டல் மற்றும் செய்கை புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள் மற்றும் இடைச்செயற்பாட்டு புத்தகங்கள் அடங்கலாக விசாலமான தெரிவின் கீழான சிறுவர் புத்தகங்களை 60 முதல் 80 வீதம் வரையான விலைத்தள்ளுபடியில் பெற்றோர் கொள்வனவு செய்ய முடியும்.

“கடந்த ஆண்டில் சிறுவர்களுக்கான புத்தகங்களுக்கே அதிக கேள்வி நிலவும் என நாம் எதிர்பார்த்தோம் ஆனாலும் புனைகதை புத்தகங்களுக்கு பலத்த கேள்வி நிலவியது எமக்கு வியப்பளித்துள்ளதுடன் அவை மிக விரைவாக விற்றுத் தீர்ந்தன.

இந்த ஆண்டு வாசிப்பு ஆர்வலர்களின் கேள்வியை ரூடவ்டுசெய்யும் முகமாக மிகவும் ஆர்வமூட்டுகின்ற பல்வேறு வகைப்பட்ட புனைகதை நூல்கள் மற்றும் அதிக அளவில் விற்பனையாகும் புத்தகங்களை நாம் கொண்டு வரவுள்ளோம்” என்று தீபக் மாதவன்  குறிப்பிட்டார்.

ஆங்கில புத்தகங்கள் மிகவும் நியாயமான விலைகளில் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் மக்கள் சக்தி  முன்னெடுப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில் தமது Red Readerhood நிகழ்ச்சித்திட்டத்தினூடாக தேவைகள் நிலவுகின்ற சமூகங்களுக்கு புத்தகங்களை வழங்கும் முயற்சியையும் Big Bad Wolf Books முன்னெடுக்கவுள்ளது. இவ்விற்பனை நிகழ்வில் புத்தகங்களை கொள்வனவு செய்து அவற்றை Red Readerhood கருமபீடத்தில் நன்கொடையளிப்பதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கும் இந்த நல்முயற்சிக்கு தமது ஆதரவை வழங்க முடியும்.

இலங்கை மக்கள் மத்தியில் ஆங்கில அறிவை வளர்க்கும் மற்றுமொரு மகத்தான முயற்சியாக, உள்நாட்டில் சாதாரண தரப் பரீட்சையில் உச்சப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு சர்வதே புத்தக விற்பனை நிகழ்விற்கு செல்வதற்கான வாய்ப்பினையும் கல்வியமைச்சுடன் இணைந்து Big Bad Wolf Books முன்னெடுக்கவுள்ளது. கடந்த ஆண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் உச்ச பெறுபேறுகளை பெற்றவர்களை விற்பனை நிகழ்விற்கு வரவழைத்த Big Bad Wolf Books தமது வீடுகளுக்கு எடுத்துச் செல்வதற்காக ஏராளமான புத்தகங்களை அவர்களுக்கு வழங்கியிருந்தது.

மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் கிடைக்கும் புத்தகங்கள், Big Bad Wolf டீ-ஷேர்ட்டுக்கள் மற்றும் சேகரிப்பு பொருள் வகைகளை இவ்விற்பனை நிகழ்வில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினையும் புத்தகப் பிரியர்கள் கொண்டுள்ளனர்.

இவ்வருடத்திலிருந்து விற்பனை நிகழ்வில் Big Bad Wolf இன் உத்தியோகபூர்வ கொள்வனவு பைகளையும் அவர்கள் சேகரித்துக் கொள்ள முடிவதுடன் நிலைபேற்றியல் மீதான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக பிளாஸ்திக் பைகளுக்குப் பதிலாக மீளப் பயன்படுத்தப்படக்கூடிய துணிகளிலான பைகள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. புத்தகப் பிரியர்கள் தமக்கு பசியெடுக்கும் நேரங்களில் The Sandwich Factory இன் ஹிஷாம் காதரின் ஏற்பாட்டில் வெளிப்புறத்திலுள்ள உணவுக்கூடத்தில் பல்வேறு வகையான உணவுகளையும் நொறுக்குத்தீனிகளையும் சுவைத்து மகிழ முடியும்.

இவற்றை விட,  https://www.bigbadwolfbooks.com/lk/register/english மூலமாக Wolf Pack அங்கத்தவராக இணைந்துகொள்வதன் மூலமாக விற்பனை நிகழ்வில் பிரத்தியேகமான சலுகைகளை பார்வையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

Big Bad Wolf சமூக ஊடக வலைத்தளங்கள்:

Facebook: https://facebook.com/bbwbookssrilanka

Instagram: https://www.instagram.com/bigbadwolfbooks_sl

BIG BAD WOLF BOOKS தொடர்பான விபரங்கள்

உலகின் மிகப் பாரிய புத்தக விற்பனை நிகழ்வு என அறியப்படுகின்ற Big Bad Wolf புத்தக விற்பனை 24 மணி நேரமும் இடைவிடாத விற்பனை நிகழ்வுகளின் மூலமாக 60 முதல் 80 வீதம் வரையான உயர்ந்த தள்ளுபடிகளுடன் புத்தம்புதிய ஆங்கில புத்தகங்களை வழங்கி வருகின்றது. பொதுமக்களுக்கு கட்டுபடியாகும் விலைகளில் புத்தகங்களை வழங்கி, சர்வதேசரீதியாக ஆங்கில அறிவை ஊக்குவிப்பதே இப் புத்தக விற்பனை நிகழ்வின் அடிப்படை நோக்கமாகும்.

அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் புனைகதைகள் மற்றும் புனைகதை அல்லாத நூல்கள், இளம் பராயத்தினருக்கான புனைகதைகள் மற்றும் பரந்த அளவிலான சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கலாக அனைத்து வகையான பலதரப்பட்ட புத்தகங்கள் இப்புத்தக விற்பனை நிகழ்வில் இடம்பெற்றுள்ளன.

BookXcess ஸ்தாபகர்களான அன்ட்ரூ யாப் மற்றும் ஜாக்குலின் னேக்கின் எண்ணக்கருவான இவ்விற்பனை, 2009 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக இடம்பெற்று வருகின்றது. இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் இது தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டில் இரண்டாவது தடவையாக இலங்கையிலும் இடம்பெறவுள்ளது.

PROREAD LANKA (PVT) LTD நிறுவனம் தொடர்பான விபரங்கள்

The Big Bad Wolf புத்தக விற்பனை கொழும்பு 2018 இனை ProRead Lanka (PVT) LTD நிறுவனம் இலங்கையில் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையில் அறிவைப் பெற்றுக்கொள்வதிலும் கற்றலுக்கான வாய்ப்புக்களிலும் காணப்படும் இடைவெளியை நிரப்பும் முயற்சியில் கவனம் செலுத்தியுள்ள ஒரு நிறுவனமாக ProRead Lanka திகழ்ந்து வருகின்றது. தகவல் மற்றும் புத்தகங்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் பாரிய அளவிலான வழிமுறைகளை ஏற்படுத்தல், கட்டுபடியாகும் விலைகளில் அவர்கள் வாசிப்பதற்கு உதவுதல் மற்றும் ‘அனைவருக்கும் அறிவு’ என்ற நல்வாக்கியத்தை பரப்புதல் ஆகிய நோக்கங்களுக்காகவே இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.