பங்­க­ளாதேஷ் - ஆப்­கா­னிஸ்தான் அணி­க­ளுக்­கி­டையிலான 3 போட்­டிகள் கொண்ட இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் உத்­த­ரகாண்ட் தலை­நகர் டேரா­டூனில் நடை­பெற்று வரு­கின்­றன.

இதில் நடை­பெற்ற முதல் ஆட்­டத்தில் ஆப்­கா­னிஸ்தான் வெற்றி பெற்­றது. இந்­நி­லையில் இரண்­டா­வது போட்டி நேற்­று­ முன்­தினம் நடைபெற்றது. 

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் அணியின் தமிம் இக்பால் 43, முஷ்­பிகுர் ரஹ்மான் 23,  அபு ரைடர் ரோனி 21 ஓட்­டங்­களைப் பெற ஏனை­ய­வர்கள் விரைவில் விக்கெட்டை பறி­கொ­டுத்­தனர்.

இதனால் பங்­க­ளாதேஷ் அணி 20 ஓவர்­களில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 134 ஓட்­ட­ங்களை எடுத்­தது.

ஆப்­கா­னிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்­கெட்­டுக்­க­ளையும் நபி 2 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினர்.

இதை­ய­டுத்து 135 ஓட்­டங்­களை இலக்­காகக் கொண்டு ஆப்கானிஸ்தன் கள­மி­றங்­கி­யது. தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக ஆடிய மொஹ­மது ஷேஷாத் 24, உஸ்மான் கனி 21 ஓட்­டங்­க­ளுடன் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த சாமுல்லா ஷென்­வாரி அதி­ர­டி­யாக ஆடி 49 ஓட்டங்களை பெற்று ஆட்­ட­மி­ழந்தார்.

இறு­தியில், ஆப்­கா­னிஸ்தான் அணி 18.5 ஓவர்­களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்­டங்­களைப் பெற்று வெற்றயீட்டியது. இதைத்­தொ­டர்ந்து பங்களாதேஷுடனான இருபதுக்கு - 20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

இந் நிலையில் மூன்றாவது இரு­ப­துக்கு 20 போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு உத்­த­ரகாண்டிலுள்ள ராஜுவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.