இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் கார்கில்ஸ் புட் சிட்டி எவ்.ஏ. கிண்ணம் 509 அணிகளைக் கொண்டு நாளை ஆரம்பமாகவுள்ளது.
2015 ஆம் ஆண்டுக்கான எவ்.ஏ. கிண்ணத்தில் மொத்தம் 509 கழக அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் மொத்தம் 508 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. நாளை சனிக்கிழமை 21ஆம் திகதி ஆரம்பமாகும் கார்கில்ஸ் புட்சிட்டி எவ்.ஏ. கிண்ணம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளது.
கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் இவ் எவ்.ஏ. கிண்ணத் தொடருக்கு மூன்றாவது தடவையாக கார்கில்ஸ் புட்சிட்டி நிறுவனம் முழு அனுசரணையை வழங்குகின்றது.
எவ்.ஏ.கிண்ணத் தொடரின் ஆரம்ப நிகழ்வு நேற்றுமுன்தினம் இலங்கைக் கால்பந்து சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கார்கில்ஸ் புட்சிட்டி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் அந்நிறுவன அதிகாரிகள், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா, சம்மேளனத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற எவ்.ஏ. கிண்ணத் தொடரில் மொத்தம் 629 அணிகள் கலந்துகொண்டன. இதில் கொலம்போ எவ்.சி. கழகம் சம்பியனாக தெரிவானது. இரண்டாம் இடத்தை புளூ ஸ்டார் கழகம் பெற்றது.
2015ஆம் ஆண்டுக்கான எவ்.ஏ. கிண்ணத் தொடரில் இலங்கை முழுவதும் உள்ள கழக அணிகள் பங்குபற்றுகின்றன. இதில் மது மாந்தை பிரதேச கழக அணி முதல் தடவையாக எவ்.ஏ.கிண்ணத்தில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கிண்ணியா, மன்னார், முல்லைத்தீவு, மூதூர், பருத்தித்துறை, திருகோணமலை, வலிகாமம், வடமராட்சி, வவுனியா என்று வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் கழக அணிகளோடு முழு இலங்கையையும் உள்ளடக்கி எவ்.ஏ.கிண்ணம் நடத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM