சிங்கப்பூரில் இருந்து காலா திரைப்படத்தை பேஸ்புக் மூலமாக நேரடியாக ஒளிபரப்பிய பிரவீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் கேத்தே திரையரங்கிலிருந்து பேஸ்புக்கில் காலா திரைப்படத்தை 45 நிமிடங்கள் நேரடியாக  வௌியிட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில், பிரவீன் என்ற நபரை சிங்கப்பூர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று  வெளியாகியுள்ள நிலையிலேயே மேற்படி கைதும் இடம் பெற்றுள்ளது.