மகப்பேற்று விடுமுறையாக 84 நாட்கள்

Published By: Vishnu

07 Jun, 2018 | 10:22 AM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

இரண்­டுக்கு மேற்­பட்ட பிள்­ளை­களை  பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு 84 நாட்கள் மகப்­பேற்று விடு­முறை வழங்­கு­வ­தற்­கான சட்ட திருத்தத்­திற்கு நேற்று பாரா­ளு­மன்றம் ஏக­ம­ன­தாக அங்­கீ­காரம் வழங்­கி­யது.

தொழில் புரியும்  பெண்­க­ளுக்கு வழங்­கப்­படும் மகப்பேற்று முறைகள் தொடர்­பான சட்­ட ­தி­ருத்­தங்கள் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

மகப்­பேற்று நன்­மைகள் (திருத்த) சட்­ட­மூலம் மற்றும் கடை, அலுவலக ஊழியர் (ஊழி­யத்­தையும், வேத­னத்­தையும் ஒழுங்­கு­ப­டுத்தல்) சட்ட தி­ருத்தம் என்­பன நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. ஆளும் கட்­சியின் பிர­தம கொறடா அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக இந்த திருத்­தங்­களை சபையில் சமர்ப்­பித்தார்.

இந்த திருத்­தங்­க­ளுக்கு அமைய பெண் ஒருவர் மகப்­பேற்­றுக்­காக பெற்றுக்கொள்ளும் விடு­முறை 84 தினங்கள் ஆகும். அதா­வது இது­வரை முதல் இரு குழந்­தை­க­ளுக்கு மாத்­திரம் 84 நாட்கள் விடு­முறை வழங்­கப்­பட்­டது. 

இத் ­தி­ருத்­தத்­துக்கு அமைய இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் ஒரு­வ­ருக்கும் 84 நாட்கள் மகப்­பேற்று விடு­முறை வழங்­கப்­படும். குழந்தை பிறக்கும் திக­திக்கு இரண்டு வாரங்கள் முன்­னரும், குழந்தை பிறந்த திகதியிலிருந்து 10 வாரங்களும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என இந்தத் திருத்தங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44