தென்­மேற்கு பரு­வ­ மழை கார­ண­மாக நாட்டை சுற்­றிய கடற்­ப­ரப்பில் காற்றின் வேகம் எதிர்­வரும் சில தினங்­க­ளுக்கு அதி­க­ரிக்­க கூடும் என வளிமண்டளவியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

 

இது தொடர்பில்  அந்த திணைக்­களம்   விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

யாழ்ப்­பாணம், மன்னார், முல்­லைத்­தீவு, வவு­னியா, கண்டி, நுவ­ரெ­லியா, மாத்­தளை, பதுளை, மொன­ரா­கலை, குரு­ணா­கல், புத்­தளம், இரத்­தி­ன­புரி மற்றும் கேகாலை பிர­தே­சங்­க­ளுக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்­கூடும்.   ஏனைய பிர­தே­சங்­க­ளுக்கு மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்­கூடும் 

காங்­கே­சன்­துறை மற்றும் பொத்­துவில் கடற்­ பி­ர­தே­சங்­களில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்­கூடும்.  

இதே­வேளை, கடல் கொந்­த­ளிப்பு ஏற்­ப­டக்­ கூடும் என்பதால் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.