நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் ‘என் ஜி கே ’என்ற படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த படத்தில் சூர்யா அரசியல்வாதியாகவும், அவருக்கு மனைவியாக சாய் பல்லவியும், அவருக்கு காதலியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கிறார்கள். இதில் ஜெகபதி பாபு, இளவரசு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் மூலம் சூர்யா தன்னுடைய ரசிகர்களைப் பார்த்து கேள்வி கேட்பது போலவும், கையெடுத்து கும்பிடுவது போலவும் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தீபாவளி விருந்தாக வரவிருக்கும் இந்த என் ஜி கே குறித்து சிலர் இணையத்தில் எம்ஜிஆர் மூன்றெழுத்து எங்கள் சூர்யா மூன்றெழுத்து, அவர் நடிக்கும் என் ஜி கேவும் மூன்றெழுத்து என்று கமெண்ட் செய்து பரபரப்பாக்கி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.