நோயாளி ஒருவர் மருத்துவரிடம் சென்று எம்முடைய உடல் உறுப்புகளில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கவேண்டிய உறுப்பு எது? இதயமா? சிறுநீரகமா? கல்லீரலா? என கேட்டிருக்கிறார். 

மருத்துவர் அந்த நோயாளியிடம் கல்லீரல் எண்பது சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தாலும் சிகிச்சையளித்து குணப்படுத்த இயலும். சிறுநீரகங்கள் எழுபது சதவீத அளவிற்கு சேதமடைந்திருந்தாலும் சிகிச்சையளித்து குணப்படுத்த இயலும். 

இதய அடைப்பு தொண்ணூறு சதவீதம் இருந்தாலும் உரிய சிகிச்சையளித்து குணப்படுத்த இயலும். ஆனால் ஏதேனம் விபத்து ஏற்பட்டு எம்முடைய தோல் பகுதியில் ஐம்பது சதவீதம் பாதிக்கப்பட்டிருந்தாலும் குணமளிக்க இயலாது. 

மரணத்தை எதிர்கொள்ளவேண்டியதிருக்கும். இப்போது தெரிந்ததா? எம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு எது என்பதை என்று நோயாளியிடம் டொக்டர் கேட்டவுடன், அந்த நோயாளி தலையாட்டினார். பின் தோலைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளவேண்டும் ? என கேட்டார்.

அதற்கும் பதிலளித்த மருத்துவர்,முதலில் எம்முடைய தோலும், கண்களில் உள்ள வெள்ளைப்படலம் மற்றும் கருவிழி ஆகியவையும் ஒரே திசுக்களால் ஆனவை. ஆனால் கண்களைப் பாதுகாப்பது போல் நாம் எம்முடைய தோலை பாதுகாத்து பராமரிப்பதில்லை. அதிலும் குறிப்பாக கோடைக் காலத்தின் போது தான் தோல் நோய்கள் அதிகம் வரும். எம்மவர்களும் கோடையின் வெப்பம் தாங்காமல் விரல் நகங்களால் முதுகு, கால், தலை, கெண்டைக்கால், தொடை என அனைத்து பாகங்களிலும் நன்றாக இருககிறது என்று சொரிந்து கொள்கிறோம். இதனால் தோல் பகுதியின் மேற்பகுதியில் காற்றில் உள்ள நச்சு பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவை எளிதில் உட்புகுந்து நோயையும், ஆரோக்கிய கேட்டையும் ஏற்படுத்துகின்றன. அதனால் சருமத்தை மருத்துவர்களின் ஆலோசனையும் உரிய முறையில் பேணி பாதுகாத்து வரவேண்டும்.

டொக்டா சிவக்குமார்.

தொகுப்பு அனுஷா.