நீட் தேர்வை சுயலாபத்திற்காகவும் அரசியலுக்காகவும் பயன்படுத்துகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

‘நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. 

இந்த விடயத்தில் பெற்றோரும், ஆசிரியர்களும், குழந்தைகளுக்கு நல்வழி காட்டவேண்டும். நீட் தேர்வை அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காகவும், அரசியலுக்காகவும் பயன்படுத்துகின்றன. நீட் தேர்வை காரணம் காட்டி பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்கின்றனர்.’ என்றார்.