பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜூசிலென்ஸ் என்ற 23 வயது இளம்பெண் பிறப்பிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவர். மேலும் கருப்பை வாய் மற்றும் கருப்பையும் இல்லாத காரணத்தால் இவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

மேலும், ஜூசிலென்ஸ் தன்னுடைய 15 வயதில் இருந்து இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய பெற்றோரின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக இவருக்கு மீனின் தோலை பயன்படுத்தி பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் முடிவு எடுத்தனர்.

இந்த அறுவை சிகிச்சை செய்வதற்காக “திலப்பியா” என்ற மீனின் தோல்கள் பயன்படுத்தி இவருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த வகை மீனில் அதிகமாக பாக்டீரிய தொற்றுக்கள் இருக்காது. இதனை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு எவ்வித வலியும் இருக்காது. இதனாலேயே இந்த மீனின் தோல்கள் பயன்படுத்தப்பட்டது என வைத்தியர்கள் கூறியுள்ளனர். அத்தோடு இந்த தோலில் இருந்து பிறப்புறுப்பு வடிவம் வெட்டி எடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த அறுவை சிகிச்சை சுமார், 3 வாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அப்பெண் நலமாக இருக்கிறார் என தெரியவந்தது.

மேலும், அப்பெண் கூறியதாவது, இந்த அறுவை சிகிச்சையால் நான் நலமாக இருக்கிறேன். இனி எனது காதலனோடு வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்குவேன் எனது பெற்றோரும் என்னை நினைத்து மகிழ்ச்சி அடைத்துள்ளனர் என தெரிவித்தார்.

பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு உலகில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மூலம் அதுவும் மீன் தோலைக்கொண்டு பிறப்புறுப்பு வைத்து வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.