தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 12 பேர் படுகாயமடைந்துள்தாக ஹபரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து திருக்கோவில் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் மீது பின்னால் வந்த மற்றொரு பேருந்து மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை ஹபரண, ஹரிவடுன்ன பகுதியில் வைத்தே குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 12 பேரில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அவர்களை ஹபரண வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.