Forbes இன் பெறுமதிமிக்க வர்த்தக நாமங்கள் பட்டியலில் முன்னேறியுள்ள HUAWEI 

Published By: Priyatharshan

06 Jun, 2018 | 11:22 AM
image

Forbes சஞ்சிகையால் தொகுக்கப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டிற்கான உலகின் பெறுமதிவாய்ந்த வர்த்தக நாமங்கள் என்ற வருடாந்த தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு சீன நிறுவனமாக HUAWEI மாறியுள்ளது. 

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள HUAWEI, 8.4 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகநாம பெறுமானத்துடன், 79 ஆவது ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் முதன்முறையாக இப்பட்டியலில் இடம்பெற்ற HUAWEI, 7.3 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகநாம பெறுமானத்துடன் 88 ஆவது ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து ஒரு வருடத்தில் வேகமான வளர்ச்சியுடன் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் HUAWEI, இன் வர்த்தகநாமப் பெறுமானம் 15 வீதத்தினால்  அதிகரித்துள்ளதுடன் தரப்படுத்தலிலும் 88 ஆவது ஸ்தானத்திலிருந்து 79 ஆவது ஸ்தானத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்பட்டியலில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்துவதுடன் முதல் 5 ஸ்தானங்களைக் கைப்பற்றியுள்ள அவை முதல் 100 இடங்களில் 20 வீதம் வரையான ஸ்தானங்களை தமதாக்கியுள்ளன. தொடர்ந்து எட்டாவது ஆண்டாகவும் முதலாவது ஸ்தானத்தை தனதாக்கியுள்ள Apple இனைத் தொடர்ந்து Google, Microsoft, Facebook மற்றும் Amazon ஆகிய நிறுவனங்கள் பட்டியலில் உச்ச ஸ்தானங்களை தமதாக்கியுள்ளன. முதல் 100 ஸ்தானங்களிலுள்ள வர்த்தகநாமங்கள் உலகில் 16 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சார்ந்தவையாக உள்ளதுடன் அதிகூடிய எண்ணிக்கையாக அமெரிக்க வர்த்தகநாமங்கள் 54 ஸ்தானங்களையும் அதனைத் தொடர்ந்து ஜேர்மனிய வர்த்தகநாமங்கள் 12 ஸ்தானங்களையும் ஜப்பானிய மற்றும் பிரெஞ்சு வர்த்தகநாமங்கள் முறையே 7 ஸ்தானங்களையும் தமதாக்கியுள்ளன. HUAWEI மட்டுமே இப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு வர்த்தகநாமமாகத் திகழ்கின்றது.

2017 ஆம் ஆண்டில் Mate, P மற்றும் Nova உற்பத்தி வரிசைகளுடன் தனது முழுமையான உற்பத்திகளால் வழிநடாத்தப்பட்ட வேகமான சர்வதேச வளர்ச்சியை HUAWEI அடையப்பெற்றுள்ளது. HUAWEI P10 மற்றும் HUAWEI Mate10 ஆகிய உற்பத்தி வரிசைகளின் அறிமுகம் அதன் உயர்தர உற்பத்தி வரிசையை மேம்படுத்த உதவியுள்ளதுடன் உயர் தொழில்நுட்ப உற்பத்தி வரிசை சந்தையில் HUAWEI இன் ஆதிக்கத்தை அதிகரிக்க உதவியுள்ளது. 

இதற்கிடையில் HUAWEI nova 2i ஆனது நவீன நவநாகரிக நுகர்வோரின் போக்குகள் மீது கவனம் செலுத்தியுள்ளதுடன் இளம் தலைமுறை மத்தியில் அபிமானத்தை சம்பாதித்துள்ளது.

2018 மார்ச்சில் பாரிஸ் நகரில் HUAWEI P20 உற்பத்தி வரிசையை HUAWEI உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளது. அதன் தனித்துவமான மற்றும் புத்தாக்கமான Leica Triple Camera, இலேசான உடல் வடிவமைப்பு (twilight body design) மற்றும் AI (செயற்கை புலனுணர்வு) தொழில்நுட்ப அம்சங்களுடன் HUAWEI P20 உற்பத்தி வரிசையானது சர்வதேச அளவில் அமோக விற்பனையை ஈட்டியுள்ளது. IDC வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் பிரகாரம் HUAWEI இன் சந்தைப்பங்கானது 11.7 வீதத்திலிருந்து  13.8 வீதமாக  அதிகரித்துள்ளதுடன் 2018 முதற் காலாண்டில் உலகில் மூன்றாவது ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் HUAWEI இன் சர்வதேச வர்த்தகநாம விழிப்புணர்வானது 85 வீதமாக உயர்வடைந்துள்ளதுடன் வெளிநாட்டு நுகர்வோர் மத்தியில் HUAWEI வர்த்தகநாமங்களைக் கருத்தில் கொள்வதும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதுடன் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. IPSOS வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் பிரகாரம், HUAWEI இன் வர்த்தகநாம விழிப்புணர்வு, கருத்தில் கொள்கின்றமை மற்றும் NPS (நிகர விளம்பரதாரர் புள்ளி) ஆகியன சீன சந்தையில் முதலாவது ஸ்தானத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஏனைய பிரதான சர்வதேச வர்த்தகநாம தரப்படுத்தல்களிலும் HUAWEI சிறப்பான பெறுபேறுகளை ஈட்டியுள்ளது. 2017 செப்டெம்பரில் Interbrand வெளியிட்டுள்ள “முதல் 100” மிகவும் பெறுமதிமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலில் 70 ஆவது ஸ்தானத்தை HUAWEI தனதாக்கியுள்ளதுடன் 2018 பெப்ரவரியில் Brand Finance வெளியிட்டுள்ள “2018 ஆம் ஆண்டிற்கான உலகின் முதல் 500 வர்த்தகநாம பெறுமானங்கள்” பட்டியல் அறிக்கையில் 38 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகநாம பெறுமானத்துடன் 25 ஆவது ஸ்தானத்தில் HUAWEI தரப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் HUAWEI இன் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அதிகரித்துச் செல்லும் அதன் வர்த்தகநாம ஆதிக்கம் ஆகியன தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீதான அதன் முதலீடுகள் மீது பல ஆண்டுகளாக காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டின் பலனாகும். HUAWEI இன் ஆண்டறிக்கையின் பிரகாரம்  2017 ஆம் ஆண்டில் HUAWEI இன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முதலீடுகள் 89.7 பில்லியன் சீன யுவான் (RMB)தொகையாக பதிவாக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 10 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான கூட்டு செலவுகள் 394 பில்லியன் சீன யுவான் தொகையையும் கடந்துள்ளது.

காப்புரிமைகளைப் பொறுத்த வரையில், 2017 டிசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு HUAWEI மொத்தமாக 74,307 காப்புரிமைகளை ஈட்டியுள்ளதுடன், 64,091 சீன காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ள அதேசமயம், 48,758 வெளிநாட்டு காப்புரிமை விண்ணப்பங்களையும் ஈட்டியுள்ளதுடன், அவற்றில் 90 வீதத்திற்கும் மேற்பட்டவை கண்டுபிடிப்பு தொடர்பான காப்புரிமைகளாகும்.

எதிர்காலத்தில், தனது உற்பத்திகள் மற்றும் தொழில்நுட்பத்தை HUAWEI தொடர்ந்தும் புத்தாக்கப்படுத்தி, தனது வர்த்தகநாமத்தை சர்வதேச அளவில் நுகர்வோரின் அபிமானத்தை வென்ற ஒன்றாக மாற்றியமைக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டுடன் நுகர்வோரை தொடர்ந்தும் பிரமிப்பில் ஆழ்த்தவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57