தென்கொரியாவிற்கான விஜயத்தின் போது தான் பெண்ணொருவரின் இதழில் முத்தமிட்ட சம்பவத்திற்கு பெண்கள் எதிர்ப்பு  தெரிவித்து தன்னை பதவியிலிருந்து  விலக கோரினால்  தான் உடனடியாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலக தயார் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே தெரிவித்துள்ளார்.

தென்கொரியவில் உள்ள பிலிப்பைன்ஸ் பிரஜைகளை மகிழ்விப்பதற்காகவே தான் அவ்வாறு நடந்துகொண்டதாக ரொட்ரிகோ டட்டர்டே தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவிலிருந்து பிலிப்பைன்ஸ் திரும்பிய பின்னர் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்சை சேர்ந்த பெண்கள் அதிகளவில் நான் பதவி விலக வேண்டும் என வேண்டுகோள் விடுத்தால் நான் பதவி விலகுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை முத்தமிடுவது என வழமையான நடவடிக்கை என தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மேயராகயிருந்தவேளையிலும் தான் அவ்வாறு பல பெண்களை முத்திமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேயராக பணிபுரிந்த நாட்களில் சந்திக்கும் அனைத்து பெண்களையும் நான் இதழில் முத்தமிடுவேன் என  அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் குறித்து பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ள போதிலும் அதன் காரணமாக அவரிற்கான ஆதரவு குறைவடையாதது குறிப்பிடத்தக்கது.

எனினும் அவர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மகளிர் உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.