பத்து வரு­டங்­க­ளுக்குப் பிறகு இலங்கை மற்றும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணிகள் டெஸ்ட் தொடரில் மோத­வுள்­ளன.

மூன்று போட்­டிகள் கொண்ட இத் தொடரின் முத­லா­வது டெஸ்ட் போட்டி இன்று ட்ரினிடாட் குயின்ஸ் பார்க் ஓவல் மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள இலங்கை அணி கிட்­டத்­தட்ட 10 வரு­டங்­க­ளுக்குப் பிறகு மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­யுடன் மோத­வுள்­ளது.

பத்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் மஹேல ஜய­வர்­தன தலை­மை­யி­லான இலங்கை அணி மேற்­கிந்­தியத் தீவு­க­ளுடன் விளை­யா­டி­யி­ருந்­தது.

அதனைத் தொடர்ந்து தற்­போது தினேஷ் சந்­திமால் தலை­மை­யி­லான இலங்கை அணி மேற்­கிந்­தியத் தீவு­க­ளுடன் இன்று மோதவுள்ளது.

அந்­த­வ­கையில் இன்று ஆரம்­ப­மா­கும் டெஸ்ட் தொட­ரிலும் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்­பார்க்­கலாம்.

அதே­வேளை இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க பொறுப்­பேற்று சரி­யாக ஆறு மாதங்கள் முடி­வ­டை­ய­வுள்ள நிலையில் இலங்கை அணியின் முன்­னேற்­றத்­தையும் இத் தொடரின் மூலம் நாம் கண்­டு­கொள்­ளலாம்.

மறு­மு­னையில் மேற்­கிந்­தியத் தீவு­களைப் பொறுத்­த­வ­ரையில் கட்­டாயம் வெற்­றி­பெற வேண்­டிய தொட­ராக இது அமைந்­துள்­ளது.

அண்மைக் காலங்­களில் கடும் பின்­ன­டைவை சந்­தித்து வரும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி உலகக் கிண்ணத் தொட­ருக்குக் கூட தகு­திகாண் போட்­டியில் விளை­யா­டியே உள்ளே வந்­தது.

அத்­தோடு அணி நிர்­வாகப் பிரச்­சினை மற்றும் சம்­பளப் பிரச்சினையால் கடும் சிக்­கல்களை சந்­தித்து வரும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு இத் தொடர் மிக முக்­கி­ய­மான தொட­ராகக் கரு­தப்­ப­டு­கி­றது.

ஆக மொத்­தத்தில் இரண்டு அணி­களும் தங்கள் பலத்தைப் புதுப்பித்து காட்டவேண்டிய தொடராக இது அமைந்துள்ளதால் பார்வையாளர்களுக்கு மூன்று டெஸ்ட் போட்டிகளும் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.