ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று திங்­கட்­கி­ழமை யாழ்ப்­பா­ணத் திற்கு விஜ­யத்தை மேற்­கொள்­கிறார். யாழில் இடம்­பெ­ற­வுள்ள 9 ஆவது தேசிய சாரணர் ஜம்­போ­ரியை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி யாழ். செல்­கிறார்.

இன்று திங்­கட்­கி­ழமை பிற்பகல் 4.00 மணிக்கு யாழ் மத்­திய கல்­லூ­ரியின் மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள சாரணர் ஜம்­போ­ரியை ஜனா­தி­பதி ஆரம்­பித்து வைக்­க­வுள்­ள­தோடு யாழ். மத்­திய கல்­லூ­ரியின் நூற்­றாண்டு விழா­விலும் கலந்து கொள்­ள­வுள்ளார்.

இந்­நி­கழ்வில் கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம், மேல் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முத­ல­மைச்சர் விக்னேஸ்வரன் உட்பட மாகாண சபை அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.