தொடர்ந்து பெய்­து­வரும் மழை கா­ர­ண­மாக   புத்­த­ளத்தில்  சில பகு­தி­களில் உள்ள இறால் பண்­ணைகள்  நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இறால் பண்­ணை­யா­ளர்கள்  தெரிவிக்கின்­றனர்.

புத்­தளத்தில் தொட்­டு­வாவ மற்றும் இரண­வில ஆகிய பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த  இறால் பண்­ணை­களே இவ்­வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் சுமார் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும்  பண்­ணை­யா­ளர்கள்  தெரி­விக்­கின்­றனர். இருந்த போதும் முழு­மை­யான சேத விபரம் இன்னும் உத்தியோகபூர்வமாக  அறி­விக்­கப்பட­வில்லை .

கடந்த சில நாட்­க­ளாக தொடர்ச்­சி­யாக பெய்­து­வரும் கடும் மழை காரணமாக  கடு­பிட்டி ஓயாவை அண்­மித்த  பகு­தி­களில் உள்ள பல இறால் பண்­ணை­களே  இவ்­வாறு நீரில் மூழ்கி சேத­ம­டைந்­துள்­ளன. 

புத்­தளம் பகு­தியில் பாரி­ய­ளவு இறால் பண்­ணைகள் மேற்கொள்ளப்பட்டு வரு­வ­துடன் அதன்­மூலம் பெறப்­படும் இறால்கள் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. இம்­முறை குறித்த பண்­ணை­க­ளி­னூ­டாக இறால்கள் வெளியேற்றுவதற்கு சில தினங்­களே எஞ்­சி­யி­ருந்த நிலையிலேயே இவ்வாறு சேதம் இடம்பெற்றுள்ளது. அதனடிப்படையில் 107 இறால் தடாகங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.