மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று(05-06-2018) செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி ஆறாம் வட்டாரத்தில் வைத்து இந்த வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அவசர சேவைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சென்ற பொலிஸார் மீதே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.