(எம்.எப்.எம்.பஸீர்)

ரி.என்.எல். தொலைக்­காட்­சியின் பொல்­க­ஹ­வலை ஒளி­ப­ரப்பு நிலை­யத்­துக்கு தொலைத் தொடர்­புகள் ஆணைக்குழுவினரால் நேற்று "சீல்" வைக்­கப்­பட்­டது.

 

குறித்த தொலைக்­காட்சி சேவை­யா­னது பொல்­க­ஹ­வ­லையிலிருந்து ஒளி­ப­ரப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க  தொலைத்தொடர்­புகள் ஆணைக்குழு­விடமிருந்து வரு­டாந்தம் பெற்­றுக்­கொள்ள வேண்­டிய அனு­மதிப்பத்­தி­ரத்தை இது­வரை பெற்­றுக்­கொள்­ளாமையே இவ்­ வாறு சீல் வைப்­ப­தற்கு காரணம் என தொலைத்தொடர்­புகள் ஒழுங்குப­டுத்தல் ஆணைக்குழுவின் உயரதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

பொல்­க­ஹ­வலை நீதிவான் நீதி­மன்றின் உத்­த­ர­வுக்கமைய குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரி­க­ளுடன் இணைந்து நேற்று மாலை குறித்த ஒளி­ப­ரப்பு நிலை­யத்தைச் சுற்றி வளைத்து அங்­கி­ருந்த ஒளிபரப்பு  உப­க­ர­ணங்கள் பல­வற்றை கைப்­பற்­றி­ய­தாக அந்த அதிகாரி மேலும் தெரி­வித்தார்.

அனு­மதிப் பத்­திரமின்றி நிலை­யான இவ்­வா­றான ஒளி­ப­ரப்பு உப­க­ர­ணங்­களை பயன்­ப­டுத்­து­வ­து, 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க  தொலைத்தொடர்­புகள்  சட்­டத்­துக்கு 1996 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க திருத்தச் சட்டம் ஊடாக கொண்­டு­வ­ரப்­பட்ட திருத்­தத்தின் பிர­காரம் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் எனவும் அதன் பிர­கா­ரமே தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்பு நிலை­யத்­துக்கு "சீல்" வைத்­த­தா­கவும்  அந்த அதி­காரி மேலும் தெரி­வித்தார். இந் நிலையில் குறித்த தொலைக்­காட்­சியின்  மேல், வடமேல், சப்­ர­க­முவ உள்­ளிட்ட பல பகு­தி­களில்  ஒளி­ப­ரப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக  அந்த தொலைக்­காட்சி அலை­வ­ரி­சையின் தலைவர் ஷான் விக்ரமசிங்க தெரி­வித்­துள்ளார். பழ­மை­யான தனது தொலைக்காட்சிக்கு இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கள்  இதற்கு முன்னர் ஒரு போதும் இருந்ததில்லை எனவும் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்துக் கட்டணங்களும் செலுத்தப்பட்டுள்ள நிலையில்  இவ்வாறு "சீல்" வைத்தமை அசாதாரணமானது எனவும் ஷான் விக்கிரமசிங்க தெரிவித்தார்.