அமெ­ரிக்கா நடத்தும், RIMPAC-2018 என்ற பாரிய கடற்­படை கூட்டுப் பயிற்­சியில் பங்­கேற்க, இலங்கை கடற்­ப­டையின் மரைன் படைப்­பி­ரிவைச் சேர்ந்த, 25 கொமாண்­டோக்கள், அவுஸ்தி­ரே­லி­யா­வுக்கு சென்­றுள்­ளனர்.

26 நாடுகள் பங்­கேற்கும், RIMPAC-2018 கூட்டுப் பயிற்சி எதிர்­வரும் 27ஆம் திகதி தொடக்கம், ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.

அவுஸ்திரே­லி­யாவின் குயின்ஸ்­லாந்து, அமெ­ரிக்­காவின் பேர்ள் துறை­முகம், ஹொனொ­லுலு, மற்றும் ஹவாய் ஆகிய இடங்­களில் இந்த கூட்டு பயிற்சி இடம்­பெ­று­கி­றது.

இந்த ஆண்டு கூட்டுப் பயிற்­சியில் முதல் முறை­யாக இலங்கை கடற்­ப­டைக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

மரைன் படைப்­பி­ரிவை சேர்ந்த அதி­காரி ஒருவர் உள்­ளிட்ட 25 கொமாண்டோக்கள் இந்த கூட்டுப் பயிற்­சியில் பங்­கேற்க கடந்த மே  21 ஆம் திகதி அவுஸ்­திரே­லி­யா­வுக்கு புறப்­பட்டு சென்­றனர்.

இந்த கூட்டுப் பயிற்சி ஈரூ­டக நட­வ­டிக்­கைகள் நகரப் புற நடவடிக்கைகள் சூட்டுப் பயிற்சிகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.