பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தின்போது முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபாலவும் பிரேரணைக்கு ஆதரவாக தமது வாக்கினை அளித்திருந்தார். 

இந் நிலையில் கூட்டு எதிரணியினர் கொண்டு வந்த இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்தி‍ வைத்திருந்தார்.

இந் நிலையில் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் நாள் அமர்வின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த 16 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தமது அமைச்சு பதவிகளை துறந்து தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர்.

இதில் முதல் வரிசையில் எஸ்.பி. திசாநாயக, ஜோன் செனவிரத்தன, சுமேதா ஜி ஜெயசேனவும் இரண்டாம் வரியில் சுசில் பிரேமஜெயந்த, அனுரபிரியதர்சன யாப்பா, டி .பி ஏகநாயக, டிலான் பெரேரா ஆகியோரும், மூன்றாம்  வரியில் சந்திம வீரக்கொடி, லக்ஸ்மன் யாபா அபேவர்தன ,  தயாசிறி ஜெயசேகர, சுசந்த புஞ்சிநிலமேயும் நான்காம் வரிசையில் திலங்க சுமதிபால, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே , லக்ஸ்மன் வசந்த, தாரக பஸ்நாயகவும் ஐந்தாம் வரியில் அனுராத ஜெயரதனவும் தனிக் குழுவாக அமர்ந்துகொண்டனர். 

இந் நிலையிலேய திலங்க சுமதிபால பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாம செய்ததையடுத்து இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் பிரதி சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆனந்தகுமாரசிறி தெரிவு செய்யப்பட்டார்.