அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சார்ந்தவர்கள் குறிப்பாக ஆண்கள் கல்சியத் சத்தினை தேவைக்கும் குறைவாகவே எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம் கல்சிய சத்து தேவைப்படுகிறது. ஆனால் தெற்காசியர்கள் நாளாந்தம் 500 மில்லி கிராமிற்கும் குறைவாகவே அதனை எடுத்துக் கொள்கிறார்கள்.

எலும்பின் வலிமைக்கு கல்சியம் சத்து அவசியம் தேவை என்று மருத்துவத்துறை குறிப்பிடுகிறது. அதே போல் நீங்கள் சாப்பிடும் உணவிலிருந்து முப்பது முதல் முப்பத்தைந்து சதவீத கல்சிய சத்தை எலும்புகள் உறிஞ்சிக்கொள்கிறது.

இந்நிலையில் கல்சியசத்தினை குறைவாக எடுத்துக் கொண்டால் அவர்களின் எலும்பின் வலிமை குறையும். இதனால் எலும்பு முறிவு, மூட்டு வலி போன்றவை வரக்கூடும். நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு சதவீத எலும்பு தேய்மானம் அடையத் தொடங்கும்.

இந்நிலையில் நீங்கள் கால்சியத்தையும் குறைவாக எடுத்துக் கொண்டால் விரைவில் எலும்புகள் பலவீனமடையும். அதனால் கல்சியம் சத்து அதிகமுள்ள பால், தயிர் , பன்னீர் போன்றவற்றை தவறாது உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். தினமும் விற்றமின் /டி சத்திற்காக வெயில் படும் படி நடந்துக் செல்ல வேண்டும்.

அளவாக கோப்பியை தினமும் அருந்தலாம். தினமும் முப்பது நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் எலும்புகள் வலுவடையும். 

டொக்டர் ராஜ்கண்ணா 
தொகுப்பு அனுஷா