(ப. பன்னீர்செல்வம்)

மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசியல் கட்சி விரைவில் உதயமாகும் என ஐ.ம.சு.மு. எம்.பி. தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

  தினேஷ் குணவர்தன எம்.பி இது குறித்து  . மேலும் தெரிவிக்கையில்;

ஐ.தே.கட்சிக்கு எதிரான அரசியல் சக்திகள் அனைத்தும் இன்று “இணைந்த எதிர்க்கட்சியோடு” இணைந்துள்ளதோடு மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கும் ஆதரவு வழங்க உறுதிமொழி வழங்கியுள்ளன.

அத்தோடு புதிய கட்சி தொடர்பில் தொழிற்சங்கங்கள், தொழிற்சார் நிபுணர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

இப்பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளன. இன்னும் சிலருடன் பேச்சுக்கள் நடத்தவுள்ளோம். அதில் பின்னர் புதிய அரசியல் கட்சி விரைவில் உதயமாகும் என்றார்.